Saturday, October 1, 2011

மீண்டும் வந்துவிட்டது தீபாவளி ..!!


தீபாவளி என்றாலே எல்லோர் மனதுக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு,புத்தாடை, பலகாரமும் தான். இன்னும் கொஞ்சம் நாட்களே தீபாவளிக்கு மிச்சம் உள்ள நிலையில் இப்போதே குடும்ப தலைவர்கள் தலையை உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள். புத்தாடை எடுப்பது, தைக்க கொடுப்பது என்று துணிக்கடைகளும், தையல்கடைகளும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் வேலை இது. நிறைய குடும்பத் தலைவிகள் வரப்போகும் தலைவலியை நினைத்து கவலையுடன் இருக்கும் தருணமும் கூட.(இப்பலாம் அப்படி தான்)

இப்படி இன்னும் மீதம் இருக்கும் சொற்ப்ப நாட்கள் வேகமாக சென்று விடும். ஆனால் அப்படி அந்த தீபாவளி நாளில் என்னாதான் செய்யப்போறோம் என்றால் ஒன்றும் பெரிதாக இல்லை. முக்கால்வாசி வீட்டிற்குள்ளையே அடைபட்டு கிடப்போம். முதல் நாள் விடிய விடிய வீட்டில் உள்ள பெண்கள் பலகாரம் சுட்டுக்கொண்டு இருப்பாங்க. நாம ஒவ்வொன்னா போய் டெஸ்ட் சரியா இருக்குதான்னு பார்த்துட்டு வருவோம் கையில் தொலைக்காட்சி ரிமோட்டுடன். தீபாவளி அன்று காலைல சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு, புத்தாடை போர்த்திக்கொண்டு வாங்கிய பட்டாசுகளை வெடித்து சாலையே கண்ணுக்கு தெரியாத வண்ணம் பேப்பரால் மூடிவிட்டு, செய்த பலகாரங்களை எல்லாம் அக்கம் பக்கம் வீட்டுக்கு கொடுத்துவிட்டு, வந்து டிவி முன்னாடி உக்காந்துவிடுவோம். அவ்ளோதான். பிறகு என்ன சன் டிவியை தவிர மற்ற சானல்களின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கே நேரம் பத்தாது.(அரசு கேபிள் வாழ்க) ஏற்க்கனமே பார்த்த திரைப்படத்தை தான் மீண்டும் ஒளிப்பரப்புவார்கள் (இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று கூவினால் நம்பிடுவீங்களா) இருந்தாலும் அதையும் விடாமல் பார்ப்போம். (பாதி படத்தை கட் பண்ணிடுவான் அது வேற விசையம்).

விழா நாட்கள் நிறைய விசையங்களுக்கு சிறந்த நாட்கள் தான். நிறைய செய்யலாம் வித்தியாசமாக. அப்படி என்னதான் செய்யலாம் என்று கேக்குறீங்களா..

- நாம் செய்த பலகாரங்களை அதே போல் தீபாவளி கொண்டாடும் இன்னொருவரின் வீட்டில் கொடுப்பதில் என்ன பெருசாக வந்துவிடப்போகிறது. தின்றுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்வார்கள் அவ்ளோதான். இந்த திருநாளிலும் பண்டங்களை சுவைக்க இயலாத மக்களிடம் கொஞ்சம் கொண்டு சேர்க்கலாமே.

- வெட்டியாக ஆயிரம்,ரெண்டாயிரம் என்று கரியாய் போகும் பட்டாசுகளுக்கு செலவிடுவதை குறைத்துக்கொண்டு அந்த பணத்தை எதாவது ஆக்க பூர்வமான விசையங்களில் பயன்படுத்துங்கள்.

- நாம வகை வகையா பட்டாசுகளை வெடித்துக்கொண்டு இருப்போம். நிறைய குழந்தைகள் அதை ஆவலுடன் வந்து பார்த்துக்கொண்டு இருக்கும். அவர்களின் கைகளில் கொடுத்துவிடுங்கள். அவர்களை வெடிக்க செய்து நீங்க பாருங்க, அதை விட சந்தோஷம் வேற எதும் இருக்க முடியுமா?

- தொலைகாட்சியை கொஞ்சம் மூட்டை கட்டிவிட்டு நண்பர்களோடும், உறவினர்களோடும் நேரத்தை சிலவிடுங்கள்.

- சொற்ப வினாடிகளில் வெடித்து முடிக்கும் பட்டாசுகள் நம் சுற்றுப்புறத்திலும், வாயு மண்டலத்திலும் மோசமாக தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன. முடிந்தவரை பட்டாசுகளின் பயன்பாட்டை குறையுங்கள்.

- ரொம்ப நாள் பேசாத நண்பர்கள் உறவினர்களை சந்தித்து பேசுங்கள். யாரிடமாவது சண்டையிட்டு பிரிந்திருந்தால் அவர்களை சந்தித்து பேசுங்கள்.

எனக்கு தெரிஞ்சுது அவ்ளோதான் சொல்லிப்புட்டேன். இதில் எதையாவது செஞ்சிபுட்டு வீட்ல திட்டு வாங்குனா நான் பொறுப்பல்ல. .

அன்புடன்,
கிஷோக்

10 comments:

Anonymous said...

வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பதிவு. நன்றி...

Anonymous said...

என்ன இருந்தாலும் பலகாரம் சாப்பிட்டுட்டு மல்லாக்க படுத்துகிட்டு டி.வி பாக்குறதே ஒரு தனி சுகம்தான்....

idleman said...

நன்றாகத்தான் இருக்கிறது... மேலும் எழுதிக்கொண்டே இருங்கள். சித்திரமும் கைப்பழக்கம். வலைப்பூவும் கணினி பழக்கம்!

Kishoke said...

நன்றி...ஹரிஹரன் சார் . . .

@Heart

நன்றி மச்சான் !!

Unknown said...

வாழ்த்துக்கள் கிஷோக் தொடர்ந்து எழுதுங்கள்... .. .

ReeR said...

ரொம்ப நன்றாக எழுதிறீங்களே.... ஏன்.. தீபாவளி போட்டியிலும் கலந்து கத்துக்குட்டியுடன் போட்டியிட்டு உங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளக் கூடாது??
தீபாவளி பதிவுத் தொடர்> http://www.padukai.com/topic31336.html

படுகை.காம்

காசா said...

கலகுறீங்க பாஸ் தொடர்ந்து கலக்குங்கே ........

Kishoke said...

நன்றி துரை . . .

@படுகை.காம்

நன்றி. . படம் தயார் செய்யும் முயற்சியில் இறங்கியாச்சு . .

@ஆவணம்

நன்றி பாஸ் . .

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

வாழ்த்துக்கள் கிஷோக்

Kishoke said...

@rama

நன்றி . .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...