Wednesday, October 12, 2011

களவாண்டது PART - 1

எத்தன நாளைக்கு தான் சொந்தமாவே எழுதுறது. உங்களுக்கும் படிக்க அலுப்பா இருக்கும், எனக்கு அதை விட அலுப்பா இருக்கும் ( நான் எழுதுற லட்சணம் தான் எனக்கு தெரியுமே ). அதான் இனிமே பேஸ்புக்கில் போடப்படும் பலரின் ஸ்டேடஸ்களை ஆட்டைய போட்டு கொண்டு வந்து இங்க கொட்டலானு இருக்கேன். . இத்தன நாள் களவாண்டு, களவாண்ட இடத்திளையே போட்டுடுவேன். இனிமே கொஞ்சம் பாதுகாப்பா இங்க கொண்டு வந்து போடுறேன் . .
_______________________________________________________________________________


Sundar Vadivel

சிதம்பரத்தின் வேட்டியை உருவாமல் விடமாட்டேன் - சுப்ரமணிய சாமி தொலைகாட்சி பேட்டியில் சபதம் # இந்த விஷயத்துல பாரபட்சம் பார்க்காம அதரவு தருகிறோம் ..!

_______________________________________________________________________________


முத்து ராம்

திமுக வும் அதிமுகவும் தமிழகத்தை கொள்ளையடித்த கட்சிகள்- கேப்டன்# எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கனு கேக்குறதுல லாஜிக் இருக்குபா.

_______________________________________________________________________________


Ratnavel Pandian


தேர்தலுக்கு முன்பு தனித்து போட்டி என்ற முடிவை எடுத்திருந்தால் 50 முதல் 60 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க.வுக்கு கிடைத்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்: ராமதாஸ் 
# யாருப்பா அந்த அரசியல் நோக்கர்கள்???? ஜி.கே.மணி & மற்றும் அல்லகைகளா???? அப்துல் கலாம் கனவுகான சொன்னார் அதுக்காக இப்படியா??? நோடா செல்லம்

_______________________________________________________________________________


Thadagam Web
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்படும் - ஜெ.வுக்கு பிரதமர் பதில்

# எங்களுக்கு அத பத்தி கவலையில்ல....எங்ககிட்ட ”பவர் ஸ்டார்” இருக்காரு ... அவுரு உடம்புல இருந்து எவ்வளவு பவர் வேணும்னாலும் எடுத்துக்குவோம் :)))

_______________________________________________________________________________

கார்த்திக் விநோத்

எங்க ஏரியாவுல ஒரு சுயேட்சைக்கு கிணறு சின்னம்... உங்க ஓட்ட கிணத்துல போடுங்க ..கிணத்துல போடுங்கன்னு .. கேக்குராரு....(யாருக்கு போட்டாலும் அது கிணத்துல போட்ட மாதிரிதான...)... 

_______________________________________________________________________________

Sundar Vadivel

>> இந்த குஞ்சாமணி பயபுள்ள் தலிவருக்கு தான் என் உடல்,பொருள்,ஆவின்னு ஸ்டேட்மென்ட் கொடுத்ததோட சரி அதுக்கப்பறம் எங்க போனான்,என்ன ஆனான் என்று ஒரு தகவலும் இல்ல, ரெண்டு நாளைக்கு முன்னால திருச்சி மீடிங்கில கூட காணோமே,என்ன ஆச்சு பயபுள்ளைக்கு ? # குஞ்சாமணி வாட் ஹெபன் ?தலிவர் முன்ன மாதிரி பேட்டா காசு கொடுக்கறது இல்லையா ?

>> விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு # எம்மா தாயே உனக்கு இம்புட்டு அறிவு இருக்குனு இவ்ளோ நாளா தெரியாம போச்சே...நீ சொன்ன இந்த ரகசியத்தை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை, அப்ப தான் பின்னால் வர சந்ததிகள் அத பார்த்து படிச்சு உங்க புகழ தெரிஞ்சுக்குவாங்க ...!
_______________________________________________________________________________


Thursday, October 6, 2011

ஆப்பிளை உலகுக்கு தந்தவர் !! (Steve Jobs)

Steve Jobs - கைக்குள் அடங்கும் ஆப்பிளுக்குள் உலகையே அடக்கியவர்!

ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒருவரை இதுவரை தெரியாதவனும் இந்த இரண்டு நாளில் அறிந்துக்கொண்டிருப்பான். கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்ப வரலாற்றில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர். இவர் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியருமாவார். இவர்  1976 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்புட்டார் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவர்.சிறிது காலம் Pixar ஆசைப்பட நிறுவனத்தின் தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிஸ்னி போன்ற பல நிறுவனங்களின் ஆட்சி பேராய இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். அவரின் வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த பாதை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ஜாப்ஸின் ஆரம்பகால வாழ்க்கை :

சான் பிரான்சிஸ்கோ நகரில் மணமாகாத கல்லூரி மாணவர்களுக்கு மகனாய் பிறந்த ஜாப்சை கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜாப்ஸ் தம்பதியினர் தத்து எடுத்து வளர்த்தனர். கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ச்டெட் ஹை ஸ்கூலில் படித்து பின் 1971 ஆம் ஆண்டு HP நிறுவனத்தில் சிறிது காலம் ஊழியராக Steve Wozniak உடன் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் Woznaik ஜாப்ஸ்க்கு நெருக்கமானார். அப்பறம் 1974 ஆம் ஆண்டு Atari கேம் நிறுவனத்தில் டெக்னிஷியனாக Woznaik உடன் பணிபுரிந்தார்.

ஆப்பிளின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி :

1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோச்நெய்க் மேலும் இருவர் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினர். கணினியை பாகங்களை ஒன்று சேத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். பிறகு ஆப்பிள் நிறுவனம் இவர்களின் உழைப்பால் உயரத்தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு ஜாப்ஸ் பெப்சி-கோலா வில் பணிப்புரிந்து வந்த John Sculley யை ஆப்பிளின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அழைத்தார். 1984 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் ஆப்பிளின் Macintosh இயங்குத்தளத்தை ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். பிறகு Macintosh கணினி வரலாற்றில் வெற்றியும் கண்டது. ஸ்டீவிற்கு ஆப்பிளில் முக்கியத்துவம் குறைந்தது அதன் தலைமை பொறுப்பில் இருந்த John Sculley ஸ்டீவை ஓரங்கட்டினார்.. அதனால் ஸ்டீவ் விலகி தனி கம்பெனியை ஆரம்பித்தார் அவர் அறிமுகப்படுத்திய நெக்ஸ்ட் பெரிதாக் வெற்றி அடையவில்லை.

ஜாப்ஸ் ஆப்பிளில் இருந்து விலகிய பிறகு பெருமளவு பணத்தை முதலீடு செய்து 1985 ஆம் ஆண்டு NeXT கம்ப்யுடர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். Ross Perot என்ற பணக்காரரை, ஜாப்ஸ் கவரவே அவர் ஜாப்சின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். 1990 ஆம் ஆண்டு ஆபிளின் lisa போன்றே NeXT workstations ஐ வெற்றிகரமாக வெளியிட்டார் ஜாப்ஸ். அடுத்து NeXTcube, NeXTMail என்று பலவித வெற்றிகளை கண்டார் ஜாப்ஸ்.

ஆப்பிள் John Sculley தலைமையில் வீழ்ச்சி பாதையில் சென்றதால் அவர்கள் பங்குதாரர்கள் மீண்டும் ஸ்டீவிடம் தலைமை ஏற்குமாறு மன்றாடினர். 1997 ஆம் ஆண்டு ஆப்பிள் NeXT நிறுவனத்தை முயன்று தன்னுடன் இணைத்தது. 429 மில்லியன் டாலர்கள் கொடுத்து அப்பில் NeXT நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. ஜாப்சை மீண்டும் ஆப்பிள் தன் தலைமை பொறுப்பில் ஏற்றியது. NeXT இன் வெளியீடுகளை மாற்றங்கள் செய்து ஆப்பிள் வெளியிட்டது. அவற்றில் முக்கியமாக NeXTSTEP ஐ சொல்லலாம். NeXTSTEP ஐ Mac OS X ஆக வெளியிட்டது ஆப்பிள். Mac பதிவுகள் மிகுந்த வரவேற்ப்பை பெறவே ஆப்பிள் நிறுவனம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. பிறகு டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பில் ஆப்பிள் இறங்கியது. iPod எனப்படும் கையடக்க இசை கருவியை வெளியிட்டது ஆப்பிள். அதற்கான பிரத்தியேக Music ஸ்டோர்களையும் இணையத்திலும், சாப்ட்வேர் வடிவிலும் வழங்கியது.

29 ஜூன், 2007 அன்று ஆப்பிள் கைப்பேசி வரலாற்றிலும் கால்பதிக்க தொடங்கியது. தொடுத்திரையுடன் கூடிய iPhone களை வெளியிட்டது. அவை iPod ஆகவும் இயங்கவல்லது. பலவித நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவந்த ஆப்பிளின் iPhoneகள் உலக அரங்கில் பேரும் வரவேற்ப்பை பெற்று வெற்றிக்கண்டது. இன்று வரை ஆப்பிளின் iPhone மற்றும் iPod களின் புதிய புதிய பதிப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் ஜாப்ஸ். அவரின் தொழில்நுட்ப அறிவும், உழைப்பும் தான் ஆப்பிளின் வளர்ச்சிக்கும், இன்று நாம் உபயோகித்து மகிழ்ந்துக்கொண்டு இருக்கும் ஆப்பிளின் சாதனங்களுக்கு காரணமாக அமைந்தன.

உடல்நிலை காரணமாக அவர் 2011 ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஆப்பிளின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். அவர் தனது விலக்க கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் "He could no longer meet [his] duties and expectations as Apple's CEO"

ஜாப்சின் தனிப்பட்ட வாழ்க்கை :

ஜாப்ஸ் 1991 மார்ச் 18 ஆம் நாள் laurene Powell என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
2004 ஆம் ஆண்டு பாதியில் ஜாப்ஸ் புற்றுநோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த ஏழு வருடங்களாக அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இறப்பு:


இரண்டு நாட்களுக்கு முன்னர் ( October 5, 2011) அன்று அவரது குடும்பத்தில் இருந்து அவர் புற்றுநோயால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஜாப்ஸ்க்கு மரியாதை செய்யும் விதமாக அவர் இறந்த நாளன்று ஆப்பிளின் இணையத்தளத்தில் ஜாப்ஸின் கருப்பு வெள்ளை படத்தை காட்டும் ஒரு எளிய பக்கத்தை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்தது. அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது "ஆப்பிள் ஒரு தொலைநோக்கு மற்றும் ஆக்க மேதையை இழந்துவிட்டது"  ஜாப்ஸ்க்கு இரங்கல் தெரிவிக்க ஒரு பொதுவான ஈமெயில் முகவரியும் வழங்கப்பட்டு இருந்தது. கூகிள் நிறுவனமும் ஜாப்ஸ்க்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் படத்தை தனது முகப்பு பக்கத்தில் வைத்திருந்தது.


ஜாப்ஸ் என்ற ஒரு மனிதர் இல்லையெனில் ஆப்பிள் இன்றளவும் ஒரு கனியாக மட்டுமே இருந்திருக்கும்.

--> தொகுத்தது + கிறுக்கியது :)


என்று அன்புடன்,
கிஷோக்



Saturday, October 1, 2011

மீண்டும் வந்துவிட்டது தீபாவளி ..!!


தீபாவளி என்றாலே எல்லோர் மனதுக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு,புத்தாடை, பலகாரமும் தான். இன்னும் கொஞ்சம் நாட்களே தீபாவளிக்கு மிச்சம் உள்ள நிலையில் இப்போதே குடும்ப தலைவர்கள் தலையை உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள். புத்தாடை எடுப்பது, தைக்க கொடுப்பது என்று துணிக்கடைகளும், தையல்கடைகளும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் வேலை இது. நிறைய குடும்பத் தலைவிகள் வரப்போகும் தலைவலியை நினைத்து கவலையுடன் இருக்கும் தருணமும் கூட.(இப்பலாம் அப்படி தான்)

இப்படி இன்னும் மீதம் இருக்கும் சொற்ப்ப நாட்கள் வேகமாக சென்று விடும். ஆனால் அப்படி அந்த தீபாவளி நாளில் என்னாதான் செய்யப்போறோம் என்றால் ஒன்றும் பெரிதாக இல்லை. முக்கால்வாசி வீட்டிற்குள்ளையே அடைபட்டு கிடப்போம். முதல் நாள் விடிய விடிய வீட்டில் உள்ள பெண்கள் பலகாரம் சுட்டுக்கொண்டு இருப்பாங்க. நாம ஒவ்வொன்னா போய் டெஸ்ட் சரியா இருக்குதான்னு பார்த்துட்டு வருவோம் கையில் தொலைக்காட்சி ரிமோட்டுடன். தீபாவளி அன்று காலைல சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு, புத்தாடை போர்த்திக்கொண்டு வாங்கிய பட்டாசுகளை வெடித்து சாலையே கண்ணுக்கு தெரியாத வண்ணம் பேப்பரால் மூடிவிட்டு, செய்த பலகாரங்களை எல்லாம் அக்கம் பக்கம் வீட்டுக்கு கொடுத்துவிட்டு, வந்து டிவி முன்னாடி உக்காந்துவிடுவோம். அவ்ளோதான். பிறகு என்ன சன் டிவியை தவிர மற்ற சானல்களின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கே நேரம் பத்தாது.(அரசு கேபிள் வாழ்க) ஏற்க்கனமே பார்த்த திரைப்படத்தை தான் மீண்டும் ஒளிப்பரப்புவார்கள் (இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று கூவினால் நம்பிடுவீங்களா) இருந்தாலும் அதையும் விடாமல் பார்ப்போம். (பாதி படத்தை கட் பண்ணிடுவான் அது வேற விசையம்).

விழா நாட்கள் நிறைய விசையங்களுக்கு சிறந்த நாட்கள் தான். நிறைய செய்யலாம் வித்தியாசமாக. அப்படி என்னதான் செய்யலாம் என்று கேக்குறீங்களா..

- நாம் செய்த பலகாரங்களை அதே போல் தீபாவளி கொண்டாடும் இன்னொருவரின் வீட்டில் கொடுப்பதில் என்ன பெருசாக வந்துவிடப்போகிறது. தின்றுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்வார்கள் அவ்ளோதான். இந்த திருநாளிலும் பண்டங்களை சுவைக்க இயலாத மக்களிடம் கொஞ்சம் கொண்டு சேர்க்கலாமே.

- வெட்டியாக ஆயிரம்,ரெண்டாயிரம் என்று கரியாய் போகும் பட்டாசுகளுக்கு செலவிடுவதை குறைத்துக்கொண்டு அந்த பணத்தை எதாவது ஆக்க பூர்வமான விசையங்களில் பயன்படுத்துங்கள்.

- நாம வகை வகையா பட்டாசுகளை வெடித்துக்கொண்டு இருப்போம். நிறைய குழந்தைகள் அதை ஆவலுடன் வந்து பார்த்துக்கொண்டு இருக்கும். அவர்களின் கைகளில் கொடுத்துவிடுங்கள். அவர்களை வெடிக்க செய்து நீங்க பாருங்க, அதை விட சந்தோஷம் வேற எதும் இருக்க முடியுமா?

- தொலைகாட்சியை கொஞ்சம் மூட்டை கட்டிவிட்டு நண்பர்களோடும், உறவினர்களோடும் நேரத்தை சிலவிடுங்கள்.

- சொற்ப வினாடிகளில் வெடித்து முடிக்கும் பட்டாசுகள் நம் சுற்றுப்புறத்திலும், வாயு மண்டலத்திலும் மோசமாக தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன. முடிந்தவரை பட்டாசுகளின் பயன்பாட்டை குறையுங்கள்.

- ரொம்ப நாள் பேசாத நண்பர்கள் உறவினர்களை சந்தித்து பேசுங்கள். யாரிடமாவது சண்டையிட்டு பிரிந்திருந்தால் அவர்களை சந்தித்து பேசுங்கள்.

எனக்கு தெரிஞ்சுது அவ்ளோதான் சொல்லிப்புட்டேன். இதில் எதையாவது செஞ்சிபுட்டு வீட்ல திட்டு வாங்குனா நான் பொறுப்பல்ல. .

அன்புடன்,
கிஷோக்

Related Posts Plugin for WordPress, Blogger...