Steve Jobs - கைக்குள் அடங்கும் ஆப்பிளுக்குள் உலகையே அடக்கியவர்!
ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒருவரை இதுவரை தெரியாதவனும் இந்த இரண்டு நாளில் அறிந்துக்கொண்டிருப்பான். கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்ப வரலாற்றில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர். இவர் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியருமாவார். இவர் 1976 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்புட்டார் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவர்.சிறிது காலம் Pixar ஆசைப்பட நிறுவனத்தின் தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிஸ்னி போன்ற பல நிறுவனங்களின் ஆட்சி பேராய இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். அவரின் வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த பாதை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
ஜாப்ஸின் ஆரம்பகால வாழ்க்கை :
சான் பிரான்சிஸ்கோ நகரில் மணமாகாத கல்லூரி மாணவர்களுக்கு மகனாய் பிறந்த ஜாப்சை கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜாப்ஸ் தம்பதியினர் தத்து எடுத்து வளர்த்தனர். கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ச்டெட் ஹை ஸ்கூலில் படித்து பின் 1971 ஆம் ஆண்டு HP நிறுவனத்தில் சிறிது காலம் ஊழியராக Steve Wozniak உடன் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் Woznaik ஜாப்ஸ்க்கு நெருக்கமானார். அப்பறம் 1974 ஆம் ஆண்டு Atari கேம் நிறுவனத்தில் டெக்னிஷியனாக Woznaik உடன் பணிபுரிந்தார்.
ஆப்பிளின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி :
1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோச்நெய்க் மேலும் இருவர் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினர். கணினியை பாகங்களை ஒன்று சேத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். பிறகு ஆப்பிள் நிறுவனம் இவர்களின் உழைப்பால் உயரத்தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு ஜாப்ஸ் பெப்சி-கோலா வில் பணிப்புரிந்து வந்த John Sculley யை ஆப்பிளின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அழைத்தார். 1984 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் ஆப்பிளின் Macintosh இயங்குத்தளத்தை ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். பிறகு Macintosh கணினி வரலாற்றில் வெற்றியும் கண்டது. ஸ்டீவிற்கு ஆப்பிளில் முக்கியத்துவம் குறைந்தது அதன் தலைமை பொறுப்பில் இருந்த John Sculley ஸ்டீவை ஓரங்கட்டினார்.. அதனால் ஸ்டீவ் விலகி தனி கம்பெனியை ஆரம்பித்தார் அவர் அறிமுகப்படுத்திய நெக்ஸ்ட் பெரிதாக் வெற்றி அடையவில்லை.
ஜாப்ஸ் ஆப்பிளில் இருந்து விலகிய பிறகு பெருமளவு பணத்தை முதலீடு செய்து 1985 ஆம் ஆண்டு NeXT கம்ப்யுடர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். Ross Perot என்ற பணக்காரரை, ஜாப்ஸ் கவரவே அவர் ஜாப்சின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். 1990 ஆம் ஆண்டு ஆபிளின் lisa போன்றே NeXT workstations ஐ வெற்றிகரமாக வெளியிட்டார் ஜாப்ஸ். அடுத்து NeXTcube, NeXTMail என்று பலவித வெற்றிகளை கண்டார் ஜாப்ஸ்.
ஆப்பிள் John Sculley தலைமையில் வீழ்ச்சி பாதையில் சென்றதால் அவர்கள் பங்குதாரர்கள் மீண்டும் ஸ்டீவிடம் தலைமை ஏற்குமாறு மன்றாடினர். 1997 ஆம் ஆண்டு ஆப்பிள் NeXT நிறுவனத்தை முயன்று தன்னுடன் இணைத்தது. 429 மில்லியன் டாலர்கள் கொடுத்து அப்பில் NeXT நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. ஜாப்சை மீண்டும் ஆப்பிள் தன் தலைமை பொறுப்பில் ஏற்றியது. NeXT இன் வெளியீடுகளை மாற்றங்கள் செய்து ஆப்பிள் வெளியிட்டது. அவற்றில் முக்கியமாக NeXTSTEP ஐ சொல்லலாம். NeXTSTEP ஐ Mac OS X ஆக வெளியிட்டது ஆப்பிள். Mac பதிவுகள் மிகுந்த வரவேற்ப்பை பெறவே ஆப்பிள் நிறுவனம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. பிறகு டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பில் ஆப்பிள் இறங்கியது. iPod எனப்படும் கையடக்க இசை கருவியை வெளியிட்டது ஆப்பிள். அதற்கான பிரத்தியேக Music ஸ்டோர்களையும் இணையத்திலும், சாப்ட்வேர் வடிவிலும் வழங்கியது.
29 ஜூன், 2007 அன்று ஆப்பிள் கைப்பேசி வரலாற்றிலும் கால்பதிக்க தொடங்கியது. தொடுத்திரையுடன் கூடிய iPhone களை வெளியிட்டது. அவை iPod ஆகவும் இயங்கவல்லது. பலவித நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவந்த ஆப்பிளின் iPhoneகள் உலக அரங்கில் பேரும் வரவேற்ப்பை பெற்று வெற்றிக்கண்டது. இன்று வரை ஆப்பிளின் iPhone மற்றும் iPod களின் புதிய புதிய பதிப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் ஜாப்ஸ். அவரின் தொழில்நுட்ப அறிவும், உழைப்பும் தான் ஆப்பிளின் வளர்ச்சிக்கும், இன்று நாம் உபயோகித்து மகிழ்ந்துக்கொண்டு இருக்கும் ஆப்பிளின் சாதனங்களுக்கு காரணமாக அமைந்தன.
உடல்நிலை காரணமாக அவர் 2011 ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஆப்பிளின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். அவர் தனது விலக்க கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் "He could no longer meet [his] duties and expectations as Apple's CEO"
ஜாப்சின் தனிப்பட்ட வாழ்க்கை :
ஜாப்ஸ் 1991 மார்ச் 18 ஆம் நாள் laurene Powell என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
2004 ஆம் ஆண்டு பாதியில் ஜாப்ஸ் புற்றுநோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த ஏழு வருடங்களாக அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இறப்பு:
இரண்டு நாட்களுக்கு முன்னர் ( October 5, 2011) அன்று அவரது குடும்பத்தில் இருந்து அவர் புற்றுநோயால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஜாப்ஸ்க்கு மரியாதை செய்யும் விதமாக அவர் இறந்த நாளன்று ஆப்பிளின் இணையத்தளத்தில் ஜாப்ஸின் கருப்பு வெள்ளை படத்தை காட்டும் ஒரு எளிய பக்கத்தை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்தது. அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது "ஆப்பிள் ஒரு தொலைநோக்கு மற்றும் ஆக்க மேதையை இழந்துவிட்டது" ஜாப்ஸ்க்கு இரங்கல் தெரிவிக்க ஒரு பொதுவான ஈமெயில் முகவரியும் வழங்கப்பட்டு இருந்தது. கூகிள் நிறுவனமும் ஜாப்ஸ்க்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் படத்தை தனது முகப்பு பக்கத்தில் வைத்திருந்தது.

ஜாப்ஸ் என்ற ஒரு மனிதர் இல்லையெனில் ஆப்பிள் இன்றளவும் ஒரு கனியாக மட்டுமே இருந்திருக்கும்.
--> தொகுத்தது + கிறுக்கியது :)
என்று அன்புடன்,
கிஷோக்
ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ஒருவரை இதுவரை தெரியாதவனும் இந்த இரண்டு நாளில் அறிந்துக்கொண்டிருப்பான். கணினி மற்றும் மொபைல் தொழில்நுட்ப வரலாற்றில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர். இவர் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியருமாவார். இவர் 1976 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்புட்டார் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவர்.சிறிது காலம் Pixar ஆசைப்பட நிறுவனத்தின் தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிஸ்னி போன்ற பல நிறுவனங்களின் ஆட்சி பேராய இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். அவரின் வாழ்க்கை மற்றும் அவர் கடந்து வந்த பாதை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.ஜாப்ஸின் ஆரம்பகால வாழ்க்கை :
சான் பிரான்சிஸ்கோ நகரில் மணமாகாத கல்லூரி மாணவர்களுக்கு மகனாய் பிறந்த ஜாப்சை கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜாப்ஸ் தம்பதியினர் தத்து எடுத்து வளர்த்தனர். கலிபோர்னியாவில் உள்ள ஹோம்ச்டெட் ஹை ஸ்கூலில் படித்து பின் 1971 ஆம் ஆண்டு HP நிறுவனத்தில் சிறிது காலம் ஊழியராக Steve Wozniak உடன் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் Woznaik ஜாப்ஸ்க்கு நெருக்கமானார். அப்பறம் 1974 ஆம் ஆண்டு Atari கேம் நிறுவனத்தில் டெக்னிஷியனாக Woznaik உடன் பணிபுரிந்தார்.
ஆப்பிளின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி :
1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோச்நெய்க் மேலும் இருவர் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினர். கணினியை பாகங்களை ஒன்று சேத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். பிறகு ஆப்பிள் நிறுவனம் இவர்களின் உழைப்பால் உயரத்தொடங்கியது. 1983 ஆம் ஆண்டு ஜாப்ஸ் பெப்சி-கோலா வில் பணிப்புரிந்து வந்த John Sculley யை ஆப்பிளின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அழைத்தார். 1984 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் நடந்த கூட்டத்தில் ஆப்பிளின் Macintosh இயங்குத்தளத்தை ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். பிறகு Macintosh கணினி வரலாற்றில் வெற்றியும் கண்டது. ஸ்டீவிற்கு ஆப்பிளில் முக்கியத்துவம் குறைந்தது அதன் தலைமை பொறுப்பில் இருந்த John Sculley ஸ்டீவை ஓரங்கட்டினார்.. அதனால் ஸ்டீவ் விலகி தனி கம்பெனியை ஆரம்பித்தார் அவர் அறிமுகப்படுத்திய நெக்ஸ்ட் பெரிதாக் வெற்றி அடையவில்லை.ஜாப்ஸ் ஆப்பிளில் இருந்து விலகிய பிறகு பெருமளவு பணத்தை முதலீடு செய்து 1985 ஆம் ஆண்டு NeXT கம்ப்யுடர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். Ross Perot என்ற பணக்காரரை, ஜாப்ஸ் கவரவே அவர் ஜாப்சின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். 1990 ஆம் ஆண்டு ஆபிளின் lisa போன்றே NeXT workstations ஐ வெற்றிகரமாக வெளியிட்டார் ஜாப்ஸ். அடுத்து NeXTcube, NeXTMail என்று பலவித வெற்றிகளை கண்டார் ஜாப்ஸ்.
ஆப்பிள் John Sculley தலைமையில் வீழ்ச்சி பாதையில் சென்றதால் அவர்கள் பங்குதாரர்கள் மீண்டும் ஸ்டீவிடம் தலைமை ஏற்குமாறு மன்றாடினர். 1997 ஆம் ஆண்டு ஆப்பிள் NeXT நிறுவனத்தை முயன்று தன்னுடன் இணைத்தது. 429 மில்லியன் டாலர்கள் கொடுத்து அப்பில் NeXT நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. ஜாப்சை மீண்டும் ஆப்பிள் தன் தலைமை பொறுப்பில் ஏற்றியது. NeXT இன் வெளியீடுகளை மாற்றங்கள் செய்து ஆப்பிள் வெளியிட்டது. அவற்றில் முக்கியமாக NeXTSTEP ஐ சொல்லலாம். NeXTSTEP ஐ Mac OS X ஆக வெளியிட்டது ஆப்பிள். Mac பதிவுகள் மிகுந்த வரவேற்ப்பை பெறவே ஆப்பிள் நிறுவனம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. பிறகு டிஜிட்டல் சாதனங்கள் தயாரிப்பில் ஆப்பிள் இறங்கியது. iPod எனப்படும் கையடக்க இசை கருவியை வெளியிட்டது ஆப்பிள். அதற்கான பிரத்தியேக Music ஸ்டோர்களையும் இணையத்திலும், சாப்ட்வேர் வடிவிலும் வழங்கியது.
29 ஜூன், 2007 அன்று ஆப்பிள் கைப்பேசி வரலாற்றிலும் கால்பதிக்க தொடங்கியது. தொடுத்திரையுடன் கூடிய iPhone களை வெளியிட்டது. அவை iPod ஆகவும் இயங்கவல்லது. பலவித நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவந்த ஆப்பிளின் iPhoneகள் உலக அரங்கில் பேரும் வரவேற்ப்பை பெற்று வெற்றிக்கண்டது. இன்று வரை ஆப்பிளின் iPhone மற்றும் iPod களின் புதிய புதிய பதிப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் ஜாப்ஸ். அவரின் தொழில்நுட்ப அறிவும், உழைப்பும் தான் ஆப்பிளின் வளர்ச்சிக்கும், இன்று நாம் உபயோகித்து மகிழ்ந்துக்கொண்டு இருக்கும் ஆப்பிளின் சாதனங்களுக்கு காரணமாக அமைந்தன.
உடல்நிலை காரணமாக அவர் 2011 ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஆப்பிளின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். அவர் தனது விலக்க கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் "He could no longer meet [his] duties and expectations as Apple's CEO"
ஜாப்சின் தனிப்பட்ட வாழ்க்கை :
ஜாப்ஸ் 1991 மார்ச் 18 ஆம் நாள் laurene Powell என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
2004 ஆம் ஆண்டு பாதியில் ஜாப்ஸ் புற்றுநோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த ஏழு வருடங்களாக அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இறப்பு:
இரண்டு நாட்களுக்கு முன்னர் ( October 5, 2011) அன்று அவரது குடும்பத்தில் இருந்து அவர் புற்றுநோயால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஜாப்ஸ்க்கு மரியாதை செய்யும் விதமாக அவர் இறந்த நாளன்று ஆப்பிளின் இணையத்தளத்தில் ஜாப்ஸின் கருப்பு வெள்ளை படத்தை காட்டும் ஒரு எளிய பக்கத்தை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்தது. அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது "ஆப்பிள் ஒரு தொலைநோக்கு மற்றும் ஆக்க மேதையை இழந்துவிட்டது" ஜாப்ஸ்க்கு இரங்கல் தெரிவிக்க ஒரு பொதுவான ஈமெயில் முகவரியும் வழங்கப்பட்டு இருந்தது. கூகிள் நிறுவனமும் ஜாப்ஸ்க்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் படத்தை தனது முகப்பு பக்கத்தில் வைத்திருந்தது.

ஜாப்ஸ் என்ற ஒரு மனிதர் இல்லையெனில் ஆப்பிள் இன்றளவும் ஒரு கனியாக மட்டுமே இருந்திருக்கும்.
--> தொகுத்தது + கிறுக்கியது :)
என்று அன்புடன்,
கிஷோக்
7 comments:
எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவருக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா போயிருக்கும். எத்தனையோ பேரின் விருப்பங்களை படைப்புகளாக்கி காட்டிய பல அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற அந்த நல்மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
நல்ல தகவல் தொகுப்பு..
பின் எதோ சில காரணங்களுக்காக ஜாப்ஸ் ஆப்பிளில் இருந்து விலக நேர்ந்தது.// ஸ்டீவிற்கு ஆப்பிளில் முக்கியத்துவம் குறைந்தது அதன் தலைமை பொறுப்பில் இருந்த John Sculley ஸ்டீவை ஓரங்கட்டினார்.. அதனால் ஸ்டீவ் விலகி தனி கம்பெனியை ஆரம்பித்தார் அவர் அறிமுகப்படுத்திய நெக்ஸ்ட் பெரிதாக் வெற்றி அடையவில்லை... ஆப்பிள் John Sculley தலைமையில் வீழ்ச்சி பாதையில் சென்றதால் அவர்கள் பங்குதாரர்கள் மீண்டும் ஸ்டீவிடம் தலைமை ஏற்குமாறு மன்றாடினர் அதனை ஏற்று நெக்ஸ்ட் மற்றும் ஆப்பிள் இணைக்கப்பட்டு நெக்ஸ்ட் இயங்குதளம் மேம்படுத்தப்பட்டு மேக் என்று பெயரிடப்பட்டது அன்றிலிருந்து ஸ்டீவிற்கு ஏறுமுகம்தான்... தொட்டதெல்லாம் வெற்றி பெற்றது...
ஒரு மாமனிதரை இழந்தது கணினி துறைக்கு முக்கியமாக ஆப்பிளிற்கு பெரிய இழப்பாகவே இருக்கும்... அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
தகவலுக்கு நன்றி மச்சான் ... இதையும் கட்டுரையில் சேர்த்துடுரேன். .
அவர் ஆரம்பித்த PIXAR STUDIOS பற்றியும் எழுதியுருக்கலாம்... அவரின் வாழ்வில் மிக பெரும் மைல் கல் அது... மற்ற படி நல்ல தகவல் தொகுப்பு...
//ஆட்சி பேராய இயக்குனர்களில் //////தலைமை ஆட்சியருமாவார்////
தேவையானவற்றை ஆங்கிலத்திலும் எழுதலாம் .. தவறில்லை... எளிய நடையாக இருக்கும்...
நன்றி முரளி கிருஷ்ணன். . பிக்சார் பற்றி குறிப்பிட்டு இருக்கலாம். . நீளமாக போய்விடுமே என்று தவிர்த்துவிட்டேன். .
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி . .
இது ஹாலிவுட் பாலா என்னும் பதிவரால் பிக்சார் குறித்து எழுத பட்ட புத்தகம்... ரொம்ப அருமையான ஒன்னு...
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B_fcNC8PWNURODk3ODZkZjYtNDYxNi00YmY4LWIyZTYtYzE3OTBlMTgyZmRk&hl=en_US
:) பகிர்வுக்கு நன்றி . . .
Post a Comment